கோவை, செப்.12-
பல் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த வசதியில்லாததால் கல்விக் கடன் பெற்றுத்தர அரசு உதவிகோரி அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த மாணவி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். கோவை பெரியநாயக்கன்பாளையம், பிரஸ் காலனி பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் கவுசல்யா. இவரின் மகள் ஹேமா ஸ்ருதி. இவர் இந்தாண்டு 12ஆம் வகுப்பு முடித்த நிலையில், காஞ்சிபுரத்திலுள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்துள்ளது. ஆனால், அதற்கான கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே கல்வி கடன் கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று மாணவி ஸ்ருதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: