இந்தச் சித்தாந்தத்தின் விஞ்ஞானப்பூர்வ, ஜனநாயகத்துவ, புரட்சிகர, மனிதநேய சாராம்சம் பூர்ஷ்வாச் சித்தாந்தத்திலிருந்து அதனை அடிப்படையிலேயே வேறுபடுத்திக் காட்டுகிறது. பூர்ஷுர்வாச் சித்தாந்தம் ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் அமைப்பையும், ஆக்கிரமிப்புக் கொள்கையையும் நியாயப்படுத்துகிறது; அவற்றுக்குப் பல்லாண்டு பாடுகிறது; தேசியவாதத்தையும் குறுகிய கண்ணோட்டத்தையும் உபதேசம் செய்கிறது. பூர்ஷ்வாச் சித்தாந்தத்திற்கு மாறாக, கம்யூனிச சித்தாந்தம் தனது வாய்மையின் மூலமும், நேர்மையின் மூலமும், தனது ஒருங்கிணைந்த தன்னம்பிக்கைமிக்க இயல்பின் மூலமும் லட்சோப லட்சம் உள்ளங்களையும் மனங்களையும் கொள்ளை கொள்கிறது. இது ஏறுகதியிலுள்ள ஒரு வர்க்கத்தின் சித்தாந்தம்; ஒரு புதிய சமுதாயத்தின் சித்தாந்தம்; சமாதானத்தையும் மக்களிடையே நட்புறவையும் வளர்க்கும் சித்தாந்தம்.

தோழர்களே, இன்றைய நிலைமைகளில், சர்வதேச நிலைமையானது பிரச்சாரம் மற்றும் போதனைப் பணியின் தன்மை மீது ஒரு குறிப்பிடத்தக்க செல் வாக்கைச் செலுத்துகிறது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். சமீப காலமாக சர்வதேச நிலைமை பெரிதும் மோசம் அடைந்துள்ளது. அமெரிக்காவும், அதனுடைய நேட்டோ கூட்டாளிகளும் மிகமிக அபாயகரமான பாதையைப் பின்பற்றி வருகின்றனர். அதனுடைய வர்க்க சாரம் தெளிவானது: மனிதகுலத்தின் வாழ்வில் நிகழ்ந்தேறி வரும் முற்போக்கான மாற்றங்களைத் தடுத்து நிறுத்த முயல்வதும், தான் இழந்த நிலைகளை மீண்டும் பெறுவதுமே அதன் நோக்கம்.

அறுபதாம் ஆண்டுகளிலும் எழுபதாம் ஆண்டுகளிலும் ஏகாதிபத்தியம், முக்கியமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக அரங்கில் பல பிரதானத் தோல்விகளைக் கண்டது. இதற்குப் பிறகு அது சோவியத் சமூக அமைப்பை எதிர்த்தும், மார்க்சிய – லெனினியச் சித்தாந்தத்தை எதிர்த்தும் என்றும் கண்டிராத அளவுக்கு மென்மேலும் பரந்த தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. சோவியத் மக்களின் மனங்களை விஷப்படுத்தவும், சோவியத் அயல்துறைக் கொள்கையின் நோக்கங்களைத் திரித்துப் புரட்டவும், சமாதானம் மற்றும் மக்களின் சுதந்திரம் எனும் லட்சியத்தின் பிரதானக் கொத்தளமாகத் திகழும் உண்மையான சோஷலிசத்தின் வளர்ந்து வரும் செல்வாக்கைத் தடுத்து நிறுத்தவும் அது முயல்கிறது.

இரு சித்தாந்தங்களிடையே மிகவும் கடுமையான, மெய்யாகவே உலகு தழுவிய போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சித்தாந்த மற்றும் போதனைப் பணியின் உள்ளடக்கத்தையும் அதனுடைய வடிவங்களையும் வழிமுறைகளையும் புதுப்பிப்பதையும், வளப்படுத்துவதையும், காலத்துக்கு ஏற்றதாக்குவதையும், நமது பிரச்சாரம் முழுவதன் உத்வேகத்தை அதிகரிப்பதையும் தட்டிக் கழிப்பது, சம்பிரதாயப் போக்கு, படாடோபம் போன்றவை உறுதியாகப் போக்கப்பட வேண்டும். எதார்த்தமான போக்கு, மெய்ப்பாடு, நிறை பயனுடைமை நமது சாதனைகளைத் திறமையான முறையில் முன்வைத்தல், மக்களின் அக்கறையைத் தூண்டும் பிரச்சனைகள் பற்றிய சிந்தனாப் பூர்வமான பகுப்பாய்வு, புதிய சிந்தனை, தெளிவான வெளிப்பாடு – ஆகிய திசை வழியில் தான் சித்தாந்த ஊழியர்களை மத்தியக் கமிட்டி அழைத்துச் செல்கிறது.

சித்தாந்த நடவடிக்கைகள் முழுமையும் எல்லா இடங்களிலும் லெனினிய வேலைப்பாணியை வலியுறுத்துவதற்கு வகைசெய்ய வேண்டும் – காரிய நோக்கு, படைப்பாற்றல், புதுமைத் தேட்டம், சித்தாந்தத்தின் பால் உயர்ந்த ஈடுபாடு, செயலற்ற மந்தப்போக்குடனும் மற்றும் சோஷலிச ஒழுக்க நியதிகளுக்கும் கூட்டுத்துவ வாழ்க்கை முறைக்கும் முரணான யாவற்றுடனும் சிறிதும் ஒத்துப் போகாமை என்பதே லெனினிய வேலைப் பாணியாகும்.

விஞ்ஞானக் கம்யூனிசம் மற்றும் பாட்டாளிவர்க்கச் சித்தாந்தத்தின் மூலவரான காரல் மார்க்ஸின் ஆண்டு என மிகப் பொருத்தமாக அழைக்கப்படும் ஆண்டில் நமது பிளீனம் கூட்டம் நடைபெறுவது அதற்கு ஒரு விஷேட முக்கியத்துவத்தை அளிக்கிறது. இந்தச் சித்தாந்தத்தின் விஞ்ஞானப்பூர்வ, ஜனநாயகத்துவ, புரட்சிகர, மனிதநேய சாராம்சம் பூர்ஷ்வாச் சித்தாந்தத்திலிருந்து அதனை அடிப்படையிலேயே வேறுபடுத்திக் காட்டுகிறது. பூர்ஷுர்வாச் சித்தாந்தம் ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் அமைப்பையும், ஆக்கிரமிப்புக் கொள்கையையும் நியாயப்படுத்துகிறது; அவற்றுக்குப் பல்லாண்டு பாடுகிறது; தேசியவாதத்தையும் குறுகிய கண்ணோட்டத்தையும் உபதேசம் செய்கிறது. பூர்ஷ்வாச்சித்தாந்தத்திற்கு மாறாக, கம்யூனிசசித்தாந்தம் தனது வாய்மையின் மூலமும், நேர்மையின் மூலமும், தனது ஒருங்கிணைந்த தன்னம்பிக்கைமிக்க இயல்பின் மூலமும் லட்சோப லட்சம் உள்ளங்களையும் மனங்களையும் கொள்ளை கொள்கிறது.

இது ஏறுகதியிலுள்ள ஒரு வர்க்கத்தின் சித்தாந்தம்; ஒரு புதிய சமுதாயத்தின் சித்தாந்தம்; சமாதானத்தையும் மக்களிடையே நட்புறவையும் வளர்க்கும் சித்தாந்தம். தோழர்களே, சித்தாந்தப் பணியின் பயனுறுதித் தன்மையானது நாடு வாழ்ந்து வருகின்ற காலகட்டத்தின் தனித்தன்மைகளை எவ்வளவு துல்லியமாகக் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம் என்பதை நேரடியாகச் சார்ந் துள்ளது. பொதுவான முறையில் இந்தப் பிரச்சனை தெளிவானதே. சோவியத் சமுதாயம் வளர்ச்சியடைந்த சோஷலிசத்தின் ஒரு நீண்ட வரலாற்று ரீதியான கட்டத்தில் பிரவேசித்துள்ளது; ஒவ்வொரு வழியிலும் அதை செம்மைப்படுத்துவது தான் நமது கேந்திரமான கடமையாகும். நமது இன்றைய வளர்ச்சிக் கட்டத்தின் தர்க்கவியல் ஏற்கெனவே, இந்தக் கருத்துரைகளில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது முதிர்ச்சியடைந்த சோஷலிசக் கட்டமாகும். ஆனால் இது இக்கட்டத்தின் துவக்கமேயாகும்.

ஒரு புறத்தில் இன்றைய பெரும் பணிகளும் வருங்காலப் பெரும் பணிகளும் நம்மை
எதிர்நோக்குகின்றன. அதே பொழுதில் மறுபுறத்தில், கடந்த காலத்திலிருந்து வருகிற பணிகளும் உள்ளன. கம்யூனிசத்தின் முதற்கட்டத்திற்குரிய பல பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் கலாச்சாரப் பணிகளை நிறைவேற்றுவதில் பெரும் வெற்றிகள் எய்தப் பெற்றுள்ளன. கம்யூனிச வருங்காலத்தின் முளைகள் வலுப்பெற்று வருவது கண்கூடாகத் தெரிகின்றது. அதே சமயத்தில், பொருளாதார எந்திரத்தில் உள்ளகுறைபாடுகளாலும் குறிப்பாக, விவசாயத் தில் உழைப்பின் உற்பத்தித் திறன் நமக்குத்திருப்தி அளிக்காத வகையில் இருப்பதாலும், மக்களின் ஒரு பகுதியின் சமுதாய உணர்வு போதிய முதிர்ச்சி அடையாததாலும், ஒழுங்கு கட்டுப்பாட்டின் பற்றாக்குறையினாலும் நமது முன்னேற்றம் தடைப்படுகிறது.

உழைக்கும் மக்களின் கருத்துக்களும் மனோபாவங்களும் நமது சாதனைகளின் செல்வாக்கால் மட்டுமன்றி, குறைபாடுகள் சங்கடங்கள் ஆகியவற்றாலும் உருப்பெறுகின்றன. இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். “வர்க்கம் முழுமையின் (அதனுடைய கம்யூனிஸ்ட் முன்னணிப்படையினுடையது மட்டுமல்ல) மற்றும் அனைத்து உழைக்கும் மக்களின் (அவர்களில் முன்னேற்றமடைந்தவர்கள் மட்டுமன்றி) வர்க்க உணர்வு மற்றும் தயார் நிலையின் எதார்த்த நிலையை நிதானமாகக் கண்டறிந்து முன்செல்வது ‘’ கட்சியின் அடிப்படையான கடமையாகும் என்ற லெனினுடைய ஆணையை நாம் கறாராகக் கடைப்பிடித்து முன்செல்ல வேண்டும். இந்த அடிப்படையில் தான் வெகுஜன அரசியல் பணியில், கம்யூனிச நிர்மாண லட்சியத்தில் எந்த அளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்பதைக் கணக்கிட முடியும்.

இவையாவும் நமக்கு முன்னால், பல தத்துவார்த்த நடைமுறைப் பணிகளை முன்வைக்கின்றன. தத்துவார்த்தப் பணிகளை முதலில் ஆய்வு செய்வோம். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 24- 26 ஆவது காங்கிரசுகள் மற்றும் மத்தியக் கமிட்டியின் பிளீனம் கூட்டங்கள் ஆகியவற்றின் ஆவணங்களிலும், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஒய்.வி.ஆந்திரபோவின் அறிக்கைகளிலும் அடங்கியுள்ள கருத்துரைகளையும், முடிவுகளையும் அண்மைக் காலத்தில் மார்க்சிய-லெனினிய சிந்தனையின் மெய்யான சாதனைகள் என்று நாம் சரியாகவே கருதுகிறோம். வளர்ச்சியுற்ற சோஷலிசம் எனும் கருத்தமைப்பின் உருவாக்கம், விஞ்ஞான, தொழில்நுட்பப் புரட்சி நிலைமைகளில் உற்பத்தியின் திறமையை உயர்த்தும் வழிகளை வகுத்தல், கம்யூனிசத்தினது முதற்கட்டத்தின் வரலாற்று ரீதியான கட்டுக் கோப்பினுள் வர்க்கங்களற்ற சமுதாயக் கட்டமைப்பை நிறுவும் பிரச்சனையை முன்வைத்தல், தற்போதைய கட்டத்தில் தேசிய இனங்கள் பிரச்சனையின் உள்ளடக்கத்தையும், சர்வதேச வாழ்க்கையின் மிக முக்கியமான போக்குகளையும் பற்றிய நமது கருத்துக்களை ஆழப்படுத்துதல், போரும் சமாதானமும் பற்றிய, சோஷலிசத் தாயகத்தின் பாதுகாப்பைப் பற்றிய லெனினிய போதனையைச் செழுமைப்படுத்துதல் ஆகிய இவையும் பிறதத்துவார்த்தப் பொது நிர்ணயிப்புக்களும் கட்சிக்குப் புதிய கருத்துக்களையும் நமது காலத்தில் அவசரப் பிரச்சனைகளுக்கு விஞ் ஞான ரீதியில் தீர்வு காணுவதற்கான சீரான அணுகுமுறையையும் வழங்குகின்றன.

Leave A Reply

%d bloggers like this: