வேலுர்,

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஏரியில் குளிக்கச்சென்ற மாணவர்கள் இருவர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிம்மணபுதூர் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன், சுரேஷ் ஆகிய இருவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வந்தனர்.திங்களன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற இருவரும் அருகில் உள்ள ஏரியில் குளிக்கச்சென்றுள்ளனர். அப்போது ஆழம் அதிகம் நிறைந்த பகுதிக்கு சென்று குளித்த போது இருவரும் சேற்றில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். இதை நேரில் கண்ட மற்றொரு மாணவர் கொடுத்த தகவலை அடுத்து, அங்கு வந்த காவலர்கள் இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave A Reply