பாஜக தமிழக தலைவர் தமிழிசை நீட் குறித்து தமக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்பது போல் பிதற்றி வருகிறார்.

நடிகர்கள் கமல், சூர்யா, போராடும் மாணவர்கள் யாருக்கும் எதுவும் தெரியாதாம். அம்மணி மட்டுமே அனைத்தும் அறிந்தவராம். இத்தகைய நபர்களை எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் என்பார்கள்.

ஒரு ஊரில் ஏகாம்பரம் என்று ஒருவர் இருந்தாராம். யார் எதை சொன்னாலும் அது எனக்கு மட்டும்தான் தெரியும் என்பாராம். பனை மரமே இல்லாத அந்த ஊரில், ஒரு நாள் ஆற்று வெள்ளத்தில் பனங்கொட்டை ஒன்று மிதந்து வந்ததாம். இது என்ன தெரியாத மக்கள் ஏகாம்பரத்திடம் கேட்க, இதில் முடி நிறைய இருப்பதால் பனங்கொட்டையை கரடி முட்டை என்றாராம்.

இப்படித்தான் இருக்கிறது எல்லாம் தெரிந்த ஏகாம்பரஸ்வரியின் விளக்கங்களும்,

Mathukkur Ramalingam

Leave A Reply