கெய்ரோ,
எகிப்தில் தீவிரவாதிகள் நடத்திய கண்ணி வெடி தாக்குதலில் 18 காவலர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் ஆரிஷ் நகர் அருகே திங்களன்று காவல் துயினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகுண்டு திடீரென வெடித்து சிதறியது. இதில் காவல் துறையினரின் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு கடும் சேதத்திற்கு உள்ளாகின. இதில் 18 காவலர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Leave A Reply