தில்லி,
தில்லியில் ஆங்கிலம் பேசியவர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நொய்டாவைச் சேர்ந்த வருண் குலாடி என்பவர் தனது நண்பர் அமன் என்பவரை தனது மற்றொரு நண்பரின் காரில் கானட் பிளேஸிலில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டிலில் இறக்கி விட்டுள்ளார். அப்போது இருவரும் ஆங்கிலத்தில் பேசியுள்ளனர்.
அப்போது அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் வருணிடம் ஆங்கிலத்தில் பேசக் கூடாது என்று கூறி மிரட்டி உள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஐந்து பேர் கொண்ட கும்பல் வருணை சரமாரியாக தாக்கி உள்ளது. இதனால் வருண் நிலைகுலைந்து தரையில் விழுந்தார். அதன்பின் அந்த ஐவரும் ஒரு வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனர். வருண் அவர்கள் சென்ற வாகனத்தின் பதிவெண்ணை குறித்துக் கொண்டு காவல் துறையில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

நாடு முழுவதும் மாட்டிறைச்சி உண்பவர்கள் விற்பவர்கள் என பலரும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தற்போது ஆங்கிலத்தில் பேசியதற்காக ஒருவர் தாக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: