இன்று ஒரு சம்பவம்.காலையில் தோழர் ஒருவர் போன் செய்தார்.சொல்லுங்க தோழர் என்றேன்.

அவரது பேத்தி ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கிறாள். மூன்று நாட்களுக்கு முன்பு அவளுடன் படிக்கும் சகமாண்வி ஒருவர், அந்த சிறுமியை பார்த்து, நீ முஸ்லீம்தானே.நீ ஏன் இங்கிருக்கே.ஒங்கநாடு பாகிஸ்தாந்தானமே..அங்கயே போய்டு..என சொல்லியிருக்கிறார். அந்தச்சிறுமி அதை தன் தாத்தாவிடம் வந்து சொல்லியிருக்கிறாள்.அவரும் அப்படிலச்ம் இல்லடான்னு சொல்லி சமாளித்திருக்கிறார்.

நேற்று மீண்டும் அந்த மாணவி, தன் தோழிகள் மூவரையும் சேர்த்துக்கொண்டு வந்து அச்சிறுமியிடம் மீண்டும் அதையே சொல்லி, இவளை அடிங்கடி எனச்சொல்லி அச்சிறுமியை அடித்தும் இருக்கிறார்கள். இச்சம்பவங்களை சொன்ன அந்தத்தோழர்,பள்ளி ஆசிரியரிடம் சொல்லியிருக்கிறேன் தோழர் என்றார். பள்ளிக்கு சென்று நேரில் சொல்லிவிட்டு வாங்க..முதன்மை கல்வி அலுவரிடமும் ஒரு தகவல் சொல்லிவையுங்கள் என்றேன்.

இதைக்கேள்விப்பட்டதிலிருந்தே பெரும் அச்சம் ஏற்பட்டுவிட்டது. இரண்டாம் வகுப்பு படிக்கும் அந்த பெண்ணுக்கு மதம் குறித்து என்ன தெரிந்திருக்கப்போகிறது. இது விளைட்டாக நடந்திருக்கும் என்றும் கடந்துபோய்விட முடியவில்லை. அந்த பிஞ்சு மனதில் இப்படியொரு துவேஷத்தை விதைத்தது யார்? வீட்டில் இருப்போரா? பொதுச்சமூகமா? இந்துத்துவத்தின் நுட்பமான வேலைகள் வெற்றிபெற தொடங்கிவிட்டதன் அடையாளமாகவே இதை பார்க்கிறேன். இது பெரியார் மண் எனும் பெருமிதம் போதாது. இன்னும் வேலை நிறைய இருக்கிறது.

  • கருப்பு கருணா

Leave A Reply

%d bloggers like this: