மன்னார்குடி செப் 12,
மன்னார்குடியில் அதிமுக அலுவலகத்திற்கு எதிரில் உள்ள கொட்டகைக்கு  செவ்வாய் ( 12.9.2017) அதிகாலையில் யாரோ சிலர் தீ வைத்து விட்டு ஓடிவிட்டனர்.  இதனால்  அந்த கீற்றுக்கொட்டை எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து அதிமுக அம்மா பேரவை துணைச் செயலாளர்  வேட்டைத்திடல் சத்தியமூர்த்தி  என்பவர் மன்னார்குடி காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.  அலுவலகத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காமிராவின் மீது துணியை போட்டு மறைத்து விட்டு இச் செயல் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இது அதிமுகவில் நிலவிவரும் மாநிலம் தழுவிய கோஷ்டி  பூசலின் எதிரொலியாக இருக்கக்கூடும் என மன்னார்குடி நகர மக்கள் பேசி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: