பள்ளிப்பாளையம், செப்.12-
வாகனம் ஓட்டுவதற்கு அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் என்பதை கண்டித்து பள்ளிப்பாளையத்தில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த வாரம் முதல் வாகனம் ஒட்டுவதற்கு அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். இல்லையேல் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே இச்சட்டத்தை அரசு திரும்ப பெறக்கோரி செவ்வாயன்று பள்ளிப்பாளையத்தில் சிஜடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜெனரல் ஒர்க்ஸ் செயலாளர் எஸ்.காசி விஸ்வநாதன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், ஒன்றிய செயலாளர் கே.மோகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்
தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply