கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில் உயர் நீதி மன்ற நீதிபதி விதிமுறைகளை மீறி ஸ்ரீஸ்ரீ ரவி சங்கருக்கு கார் ஓட்டியதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 5ம் தேதி கவுகாத்தியில் நடந்த வடகிழக்கு உள்நாட்டு மக்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சென்றிருந்தார். பின்னர் அவர் விமானநிலையத்திற்கு காரில் வந்தார். காரை கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜித் சிங் ஓட்டிவந்தார்.
விமானநிலைய வாசலில் இந்த காட்சி வீடியோ மற்றும் புகைப்படமாக எடுக்கப்பட்டு சமூக வளைதளங்களில் பரவியது. இதன் மூலம் தலைமை நீதிபதி உயர்நீதிமன்ற விதிமுறையை மீறியுள்ளார் என்று பார் சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தை எதிர்வரும் கவுகாத்தி உயர்நீதிமன்ற பார் சங்க கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

Leave A Reply