பாட்னா:
பீகாரில் வாகனசோதனையின் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீகாரின் முசாபர் நகரில் வாகன சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது கனரக வாகனம் மோதி 4 காவலர்கள் உட்பட 5 பேர் உயிரிந்துள்ளனர். மேலும் 2 காவலர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். தப்பிச் சென்ற வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: