தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும் சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் நான்காவது நாளாக இந்திய மாணவர் சங்கம் தலைமையில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு கல்லூரியின் மாணவர் சங்க தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார்.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரியும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கம் சாலையில் உள்ள அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பிரகாஷ், மாவட்டச் செயலாளர் ந. அன்பரசன், நிர்வாகிகள் நந்தினி, சுந்தர மூர்த்தி, ஜோதீஸ்வரன் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வுக்கு எதிராக வேலூர் ஓட்டேரியிலுள்ள அரசு முத்துரங்கம் கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அனிதா சாவுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதி மறுத்த காவல்துறையினர் பழைய பேருந்து  நிலையம் நோக்கி ஊர்வலம் சென்றனர். காவல்துறையினர்  தடுத்து நிறுத்தினர்.

Leave A Reply