டெராடூன் ,

டெராடூனில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருள்களையும், துப்பாக்கியையும் பறிமுதல் செய்த காவலர்கள் இது தொடர்பாக  2 ராணுவ வீரர்கள் உட்பட 3 பேரை  கைது செய்தனர்.

உத்தரகண்ட் மாநிலம் டெராடூனில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது எஸ்.யூ.வி கார் ஒன்றில் ரூ.5 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருள்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். இது தொடர்பாக 2 ராணுவ வீரர்கள் உட்பட 3 பேரை கைது செய்த காவலர்கள் அவர்களிடம் இருந்த போதை பொருள்களையும், துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். கைது செய்தவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவலர்கள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: