மாதவிடாய் காலத்தில் நான் கோயிலுக்குள் சென்றேன் என்று தெரிவித்த எழுத்தாளர் காஜல் ஒஜா வைத்தியாவிற்கு கொலை மிரட்டல்கள் வருவதாக அவர் புகார் அளித்துள்ளர்.
பெண்கள் மாதவிடாய் காலங்களில் படும் அவஸ்தைகள் மற்றும் சவால்கள் குறித்து பிபிசி நிறுவனம் lets talk periods என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக எழுத்தாளர் காஜல் ஒஜா வைத்தியா தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். அவர் கூறியதாவது:- மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் மூடநம்பிக்கைகளை நான் ஒரு போதும் விரும்புவதில்லை. மாதவிடாய் காலத்தில் நான் கோயிலுக்கு சென்றேன் என்றார்.
வைத்தியாவின் இந்த கருத்துக்கு ஆன்லைனில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற செயல்களினால் இந்துக்களின் கொள்கையை மீறியுள்ளாய். உன்னை கொலை செய்து விடுவேன் என்று ஒருவர் மிரட்டினார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply