புதுதில்லி;
பிரமாணர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கும் வகையில் மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மத்திய அமைச்சராக இருந்துவந்த, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அனில் மாதவ் தவே சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இவர் பிராமணர் என்பதால், மத்திய அமைச்சரவையில் பிராமணர்களுக்கான பிரதிநிதித்துவம் ஒன்று குறைந்து விட்டதாக ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள் கருதின.

மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசத்தில் தாகூர் சமூகத்தினருக்கு அதிகமான அமைச்சர் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் தாகூர் பிரிவினருக்கே முதல்வர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த முக்கியத்துவம் பிரமாணர்களுக்கு இல்லை என்று ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள் கவலையும் தெரிவித்து வந்தன.
எனவே மத்திய அமைச்சரவையில் பிராமணர்களுக்கு கூடுதல் இடங்கள் கொடுக்கவும், அதிலும், மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவரையே அமைச்சராக்கவும் பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் பிராமணர்கள், தேர்தலில் வெற்றி – தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாகவும் உள்ளதால், இங்கு அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வுக்கு அது லாபமாக அமையும் என்றும் கணக்கு போடப்படுகிறது.இதனடிப்படையில், மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: