கோவை, செப். 11 –
மகாகவி பாரதியின் நினைவு நாளையொட்டி கோவையில் திங்களன்று தமுஎகசவினர் பாரதியின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

விடுதலை போராட்ட கனலை தனது கவிதை வரியால் உத்வேகமடையச்செய்தவன் மகாகவி பாரதி. இவரது 96 ஆவது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை இடையர்பாளையம் தமுஎகச சார்பில் காந்தியடிகள் நினைவுப்பள்ளியில் பாரதியின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து தமுஎகச தலைவர்கள் மரியாதை செய்தனர். முன்னதாக கோவை இடையர்பாளையம் பேருந்து நிலையம் அருகில் இடையர்பாளையம் தமுஎகச தலைவர் மயில்சாமி தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமுஎகச கோவை மாவட்ட செயலாளர் மு.ஆனந்தன், மாநிலக்குழு உறுப்பினர் தி.மணி ஆகியோர் பாரதி குறித்து உரையாற்றினர். முன்னதாக தெருமுனையில் தமுஎகச பாடகர் தஞ்சை தமிழ்வாணன் பாரதியின் பாடல்களை பாடினார். இதனைத்தொடர்ந்து பாரதியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து நினைவேந்தலை அனுசரித்தனர். இந்நிகழ்ச்சியில் இடையர்பாளையம் தமுஎகசவின் நிர்வாகிகள் கோமகன் தங்கவேல், சி.துரைசாமி, பாலசுப்பிரமணியம், செந்தில்குமார், சுந்தரசாமி, சண்முகசுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

Leave A Reply