சண்டிகர்,
குர்மீத் ராம்ரஹீம் சிங் பாலியல் அடிமை என்பது மருத்துவ ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
போலிச்சாமியார் குர்மீத் ராம்ரஹீம் சிங் தனது பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம்  செய்து வந்ததாக, முன்னாள் பெண் சீடர் இருவர் இருவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில்  சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றம் விசாரித்து வந்தது.  பல ஆண்டுகாலமாக விசாரணை செய்யப்பட்டு வந்த வழக்கில், சமீபத்தில், அவர்  குற்றவாளி என அரியான நீதி  மன்றம் உறுதி செய்ததோடு, 20 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்தது.  இதைத்தொடர்ந்து சாமியாரின் சீடர்கள் நடத்திய வன்முறையில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ராம் ரஹீம் சிறையில் அடைக்கப்பட்ட பின் அவரது தேரா சச்சா ஆசிரமத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பலாத்கார சாமியாரான குர்மீத் ராம் தனது ஆசிரமத்தில் உள்ள பெண் சீடர்களை வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவு  செய்து வந்ததும், இதற்காக அவரது படுக்கை அறையில் இருந்து, பெண் சீடர்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு சென்றுவர சுரங்க பாதை இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில், குர்மீத் ராம்ரஹிம் சிங்கிற்கு சிறையில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையின்போது, சாமியார் செக்ஸ் அடிமை என்பது பரிசோதனை மூலம் உறுதிபடுத்தப்பட்டிருப்பதாக  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக சாமியார் இளம்பெண்களிடம் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளது மீண்டும் உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் அகில பாரதீய ஆகாரா பரிஷத் என்ற இந்து மடங்களின் கூட்டு அமைப்பு ஞாயிறன்று 14 போலிச்சாமியார்களின் பெயர்களை வெளியிட்டது. இதில் சாமியார் ராம் ரஹீம் சிங்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: