கோவை,

பொள்ளாட்சி வழியே தென்மாவட்டங்களுக்கு இரயில்களை இயக்காத இரயில்வே நிர்வாகத்தை கண்டித்து பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் தலைமையில் படுத்துறங்கும் போராட்டம் நடைபெற்றது.

1000 கோடி செலவு செய்து கோவை – பொள்ளாச்சி, பாலக்காடு – திண்டுக்கல் இரயில் பாதையை அகல இரயில் பாதையாக மாற்றி அமைத்தும், கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு இரயில்களை இயக்காத இரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளை சேலம் கோட்டத்தோடு இனணைக்க கோரியும் இன்று 11.09.2017 காலை 11 மணியளவில்    பொள்ளாச்சி பாலக்காடு சாலை என். ஜி.எம் கல்லூரி அருகில் இரயில் பாதையில் பாய்  , தலையனையுடன் படுத்துறங்கும் போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது, போராட்டத்தில் திமுக நகர செயலாளர் தென்றல் செல்வராஜ், மதிமுக மாவட்ட செயலாளர் குகன்மில் செந்தில், நகர செயலாளர் துரைபாய், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர்  ஜோதிமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ச. பிரபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் மகாலிங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் செல்லத்துரை,நகர தலைவர் சுப்பராயன், தமுமுக மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா, ம. ம.க மாவட்ட துணை செயலாளர் சையத்துல்லா, ம. ஜ. க நகர செயலாளர் ராஜாஜமிசா, Dyfi வட்டார செயலாளர் அன்பரசன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட அமைப்பு செயலாளர் தாமரை வீரன், pfi பீர்முகமது, cfi அப்த்துல் ஷலில், sdbi அக்பர் அலி உட்பட 200 மேற்பட்டோர் கைது

Leave A Reply