பொள்ளாச்சி, செப்.11 –
தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கக்கோரி பொள்ளாச்சியில் ரயில் பாதையில் பாய், தலையணையுடன் படித்துறங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியிலிருந்து தென்மாவட்டங்களுக்கான ரயில்களை உடனடியாக இயக்கிட வேண்டும். பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளை சேலம் கோட்டத்தில் சேர்க்க வேண்டும் எனக்கோரி திங்களன்று அனைத்து அரசியல் கட்சி மற்றும் சமூக கூட்டியக்கத்தின் சார்பில் பொள்ளாச்சி – பாலக்காடு சாலையில் உள்ள ரயில் பாதையில் பாய், தலையணையுடன் படுத்துறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம், முருகேசன் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கழக மாநில வெளியீட்டுச் செயலாளர் இரா.மனோகரன், அமைப்பு செயலாளர் வே.ஆறுச்சாமி, பிரகாஷ், திமுகவின் தென்றல் செல்வராஜ், நா.கண்ணுசாமி, மதிமுக செந்தில், துரைபாய், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருமலைசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் மூ.அன்பரசன், பாலமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் ச.பிரபு, ரவி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆர்.எம்.அருள், தமாக சுப்புராயன், செல்லதுரை, தமுமுக முஸ்தபா, மமக ஷேக் அப்துல்லா, மஜக ராஜா ஜெம்சா, அன்சார், பி.எப்.ஐ யாசின், எஸ் டி பிஐ அக்பர் அலி, சி எப் ஐ ஜவீஸ் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave A Reply