சேலம், செப்.11-
பொதுத்துறை பங்கு விற்பனையை கைவிட வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற சேலம் காப்பீட்டு கழக கோட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காப்பீட்டு கழகத்தின் சேலம் கோட்ட மாநாடு சேலம் சுனில் மைத்ரா நினைவகத்தில் நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சார்ந்த எல்ஐசி ஊழியர்கள் பங்கேற்றனர். இதில் சங்க அங்கீகாரம் மற்றும் கூட்டு பேர உரிமையை வழங்கிட வேண்டும். நான்கு பொது இன்சுரன்ஸ் நிறுவனங்களையும் ஒரே நிறுவனமாக இணைக்க வேண்டும். இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை நீக்க வேண்டும். நீட் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, பொதுக்குழு கூட்டத்தை தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணை செயலாளர் வி.சுரேஷ் துவக்கி வைத்தார். மாவட்ட பொதுச்செயலாளர் எ.கலியபெருமாள் அறிக்கையை முன்வைத்து பேசினார். நிறைவாக, அமைப்பின் பொதுச்செயலாளர் டி.செந்தில்குமார் மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார்.புதிய நிர்வாகிகள் தேர்வு இம்மாநாட்டில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் கோட்ட தலைவராக லட்சுமி சிதம்பரம், பொதுச்செயலாளராக ஏ.கலியபெருமாள், பொருளாளராக ஜே.தனராஜேஷ், துணைத் தலைவர்களாக பி.எஸ்.பொன்மொழி, எம்.மகேஷ், ரவீந்திரன், இணைச் செயலாளர்களாக ஏ.மாதேஸ்வரன், எம்.கே.கலைச்செல்வி, எஸ்.வி.என்.சாய்ராம், உதவிப் பொருளாளர் ஆர்.முருகானந்தம் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: