சொல்ல மறந்த கதை…! (Updated)

தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்த தகவல்…!

1975ம் ஆண்டு மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு நெருக்கடி நிலையை அமல் படுத்தியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. நெருக்கடி நிலை நீக்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலகி அதிமுக-வை ஆரம்பித்திருந்தார். 1977 தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார். அப்போது நாகர்கோவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரி அனந்தன். இந்நிலையில் குமரி அனந்தன் மகள் தமிழிசை அனந்தனுக்கு முதலமைச்சர் பரிந்துரையில் மொழிப்போர் தியாகிகள் ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் இடம் வழங்கப்பட்டது.

பின்னர் குமரி அனந்தன் காங்கிரஸிலிருந்து விலகி, “காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ்” ஆரம்பித்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததும், அதிமுக அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தியதும் தனிக்கதை.

இவ்வாறு குறுக்குவழியில் மருத்துவம் படித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, நீட் தேர்வு மூலம் தகுதியும், திறமையும் அங்கீகரிக்கப்படுவதாக கதை விடுவது ஒரு புறம் இருக்கட்டும்! இது குறித்து அதிமுகவினர் வாய் திறக்காமல் இருப்பதன் மர்மம் என்ன?

பின்குறிப்பு: 1961ம் ஆண்டு பிறந்த தமிழிசை அவரது 22 – 23 வயதில் அதாவது 1983 – 1984 ஆண்டுவாக்கில் MBBS முடித்திருக்க வேண்டும். MBBS முடித்த யாரும் உடனடியாக மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வார்கள். ஆனால் தமிழிசையோ 1987ம் ஆண்டில் பதிவு (எண்: 43524) செய்துள்ளதாக தெரிகிறது. அரியர்ஸ் வைத்து ஆற அமர MBBS முடித்திருப்பார் போலிருக்கிறது. இவர்தான் பேசுகிறார் தகுதியும் திறமையும் கொண்ட மருத்துவர்களை உருவாக்கவே NEET என்று….!

-Sundar Rajan

Leave A Reply

%d bloggers like this: