பதிவுத்துறையில் இணையதள வழியாக ஆவணங்கள் பதிவு செய்வது குறித்த முதல்கட்ட பயிற்சி முகாம் செங்குன்றத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் உள்ள விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் கூடுதல் பதிவுத் துறை தலைவர் அங்கையர்கண்ணி தலைமையில் திங்களன்று (செப்.11)  நடைபெற்றது.
இதில் டிசிஎஸ் கணினி மென்பொறியாளர் சந்தனா, துணைப் பதிவுத் துறை அலுவலக சார்பதிவாளர் ஜி.செல்வவிநாயக்ம் ஆகியோர் கணினி வழி செயல்முறை பயிற்சி அளித்தனர். சென்னை சரக துணைப் பதிவுத் துறை தலைவர் வி.வாசுகி, உதவி தலைவர் க.வடிவழகி, வடசென்னை மாவட்ட பதிவாளர்கள் கே.கே.மஞ்சுளா, து.மணி, சார்பதிவாளர்கள், பணியாளர்கள், ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply