உடுமலை, செப்.11-
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையின் நீர்பிடிப்பு பகுதியான குருமலை, குழிபட்டி, கருமுட்டி பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. சுமார் 160 கன அடி வரை தண்ணீர் வந்தால் திருமூர்த்தி மலை அடிவார பகுதியில் உள்ள கோவில் பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இதன்காரணமாக கோவில் திறக்கப்படவில்லை. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழையாலும், தற்போது காண்டூர் கணவாய் மூலம் 700 கன அடி தண்ணீர் திருமூர்த்தி அணைக்கு வந்து கொண்டுள்ளது. இதனால் அணையின் மொத்த கொள்ளளவான 60 அடியில் 50 அடிக்கும் மேலாக தண்ணீர் உள்ளதால் இப்பகுதி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: