நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சார்ந்த இளைஞர் பிரேம்குமார் மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்களன்று (செப். 11) மதியம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ராயபுரம் பகுதி பொருளாளர் பிரேம்குமார் சென்னை தலைமைச் செயலகம் அருகில் உள்ள பவளவிழா வளைவு அருகே மரத்தில் ஏறி நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் சுமார் 30 நிமிடம் வரை நடைபெற்றது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா சதுக்கம் காவல் துறையினர் பிரேம்குமாரை மரத்தில் இருந்து கீழே இறங்க வைத்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.

Leave A Reply