சென்னை பெருநகர தையல் கலைஞர்கள் சங்கம் (சிஐடியு) ஆவடி தொகுதி 9ஆவது மாநாடும், 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியும் ஆவடியில் தலைவர் எம்.பாலசுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் கஜேந்திரன் வரவேற்றார். சங்க கொடியை கௌரவத் தலைவர் பார்த்தசாரதி ஏற்றினார். துணைத் தலைவர் என்.கே.ரவிக்குமார் அஞ்சாலி தீர்மானத்தை முன்மொழிந்தார். இதில் மாவட்டத் தலைவர் சி.திருவேட்டை கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி மாநாட்டை துவக்கி வைத்தார். வேலை அறிக்கையை செயலாளர் சி.ராமமூர்த்தி சமர்ப்பித்தார். வரவு செலவு அறிக்கையை பொருளாளர் ஜி.குணசேகரன் சமர்ப்பித்தார். பி.கோவிந்தசாமி, ம.பூபாலன், ஆர்.ராஜன், டி.ரமணி ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.
தையல் கடைகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும், வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும், பெண்களுக்கு 50 வயது முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டை நிறைவு செய்து சம்மேளன பொதுச்செயலாளர் ஆர்.வேலுசாமி உரையாற்றினார். துணைத் தலைவர் எம்.முரளி நன்றி கூறினார். புதிய தலைவராக எம்.பாலசுப்பிரமணி, செயலாளராக டி.ராமமூர்த்தி, பொருளாளராக டி.குணசேகரன் உள்ளிட்ட 14 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
படம் டெய்லர் சங்கம

Leave A Reply

%d bloggers like this: