திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, 45. இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். செங்கம் அருகே நீப்பத்துறையில் உள்ள  சென்னம்மாள் கோவிலிற்கு, ஞாயிறன்று(செப்.10) ராஜா தனது குடும்பத்தினருடன் சென்றார். உடன் இவரது மகன் அஜய், 18, பெங்களூருவைச் சேர்ந்த நண்பர்கள் விஜய் (18), விக்னேஷ் (18) ஆகியோரும் வந்திருந்தனர். தற்போது தென்பெண்ணை ஆற்றில் நீர் ஓடுவதால், குளிப்பதற்காக மாலை  மாலை 4மணிக்கு மூவரும் ஆற்றில் இறங்தினர்.

கர்நாடகா மாநிலத்தில், தென்பெண்ணை ஆறு நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர்  திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக தற்போது  சாத்தனூர் அணையின் நீர் மட்டம், 94.35  அடியாக உள்ளது.  நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரமுள்ள கிராம மக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது.  இந்நிலையில் குளிப்பதற்கு ஆற்றில் இறங்கிய  அஜய், விஜய், மற்றும் விக்னேஷ், ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் விக்னேஷ் மட்டும் தப்பி கரை ஏறினார். அஜய், விஜய் ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

செங்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நீண்ட நேரமாக அவர்களை தேடியும் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், திடீரென அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனாலும், மணிக்கு தான் செங்கம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து, இருவரையும் தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: