தில்லி,
தில்லி நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் நிலையத்தில் தமிழக விவசாயிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் தில்லியில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய கோரியும், நியாயமான விலை கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் தமிழக விவசாயிகள் 57-வது நாளாக பல்வேறு விதமான போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம் நடத்தபோவதாக வந்த தகவலை அடுத்து அவர்களை தில்லி காவல்துறையினர் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: