புதுதில்லி;
அய்யாக்கண்ணு தலைமையிலான நதிகள் இணைப்புச் சங்க விவசாயிகள், தில்லி ஜந்தர் மந்தரில், கடந்த 57 நாட்களாக தங்களின் இரண்டாம் கட்டப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இப்போதுவரை விவசாயிகளை அழைத்துப் பேச மறுத்து வருகிறார்.

இந்நிலையில், 58-ஆவது நாள் போராட்டத்தின்போது, விவசாயிகளின் கோவணத்தையும்கூட பிரதமர் மோடி உருவுகிறார் என்பதை காட்சிகள் மூலம் சித்தரித்து, விவசாயிகள் நூதனப் போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் மீடியாக்கள் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஜந்தர் மந்தர் வந்த தில்லி காவல்துறையினர், பெண் விவசாயிகள் தவிர போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 28 விவசாயிகளை கைதுசெய்து குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: