மணலி சின்னசேக்காடு கிருஷ்ணன் தெருவில் வசித்தவர் சின்னராஜ். அவரது மனைவி கற்பகம். இவர்களது மகன்கள் பஞ்சாட்சரம் (42), நாகேந்திரன் (38), மகள் வேதநாயகி (40). அனைவரும் சின்ன சேக்காட்டில் விவசாயம் செய்து வந்தனர். தங்களது தோட்டத்திலேயே வீடு கட்டி தங்கியிருந்தனர். பஞ்சாட்சரத்துக்கு திருமணமாகி விட்டது. நாகேந்திரனுக்கும், வேதநாயகிக்கும் திருமணமாகவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சின்னராஜ் இறந்து விட்டார். வேதநாயகியும், நாகேந்திரனும் தந்தை இறந்த சோகத்திலேயே இருந்ததாகவும், யாருடனும் சரியாக பேசவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்களன்று (செப். 11)  காலை நாகேந்திரனையும், வேதநாயகியையும் காணவில்லை. இதைக் கண்டு அதிர்ச்சியடந்த பஞ்சாட்சரம் அவர்களை பல இடங்களில் தேடினார். அவர்கள் கிடைக்கவில்லை. வீட்டின் பின்னால் இருந்த கிணற்றை எட்டிப் பார்த்த போது இருவரும் பிணமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலி காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: