நாமக்கல்,
நாமக்கலில் இன்று ஜாக்டோ ஜியோ  ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பெற்றது- இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை பால கிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
கோரிக்கைகளை வலியுறுத்தி  முருக செல்வராஜன் -ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, வேல்முருகன் -மாநில தலைவர்-தலநிதி தணிக்கை துறை, கே.எஸ்.இளங்கோவன்-மாவட்ட செயலாளர் -ஓய்வூதியர்  சங்கம்,  எல்.ஜெயக்கொடி -மாவட்ட செயலாளர்- அங்கண் வாடி, முருகேசன்- மாவட்ட செயலாளர்- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், ஆர்.சரவணா -மாநில துணை தலைவர்-முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், கோ.விஜயலக்ஷ்மி-ஆசிரியர் கூட்டணி, பெ.துரைசாமி-அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், வ.குமரேசன்-பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு ஆகியோர் உரை ஆற்றினார். இறுதியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.ராஜேந்திர பிரசாத் நன்றி கூறினார்.

Leave A Reply