ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தத்தில் நீதித்துறை ஊழியர்களும் பங்கேற்பது என முடிவு செய்திருக்கின்றனர்.

தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறது. இது பற்றி சங்கத்தின் திருவாரூர் மாவட்ட தலைவர் ஐ.ஆர். அருணாச்சலம் நமது செய்தியாளரிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் மாநில அளவிலான கூட்டம் ஈரோட்டில் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை மறுபடியும் அமுல்படுத்த வேண்டும் என்றகோரிக்கை உள்பட அரசு ஊழியர் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்காக ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலைநி’றுத்தத்தில்நீதித்துறை ஊழியர்களும் மாநிலம் முழுவதும் பங்கேற்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதித்துறை ஊழியர்களும் ஜாக்டோ-ஜியோ அமைப்போடு இணைந்து வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள். இவ்வாறு ஐ.ஆர். அருணாச்சலம் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: