கோவை: சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கோவை  கருமத்தம்பட்டியில் அருகே உள்ள சோமனூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை கடந்த 7ம் தேதியன்று இடிந்து விழுந்தது. இதில் மாணவி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து  ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு 2 மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: