புதுதில்லி;
கார்த்தி சிதம்பரம் மீதான ‘லுக் அவுட்’ நோட்டீஸை செப்டம்பர் 18-ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம், வெளிநாட்டிலிருந்து பெற்ற ரூ. 305 கோடி மதிப்பிலான முதலீடுகளை, வெறும் 4 கோடி ரூபாயாக குறைத்துக் காட்டி, அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெற்றது. இவ்விவகாரத்தில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு ரூ. 90 லட்சம் கைமாறியதாகவும் புகார் எழுந்தது.

அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த சிபிஐ, கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, விமான நிலையங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸையும் அனுப்பி வைத்தது. இந்த நோட்டீஸ் மீது தடை விதிக்க மறுத்து விட்ட உச்ச நீதிமன்றம், ‘லுக் -அவுட்’ நோட்டீஸை செப்டம்பர் 11-ஆம் தேதி வரை நீட்டித்து, கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கான தடையை செப்டம்பர் 18-ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: