ஈரோடு, செப்.11-
சென்னிமலை அருகே கலங்கிய நிலையில் வரும் குடிநீருக்கு மாற்றாக சுகாதாரமான குடிநீர் விநியோகிக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். சென்னிமலை யூனியன், முருங்கதொழுவு பஞ்சாயத்து, காளிக்காவலசு பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் பிரபாகரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இப்பகுதியில் போதிய குடிநீர் விநியோகம் இல்லாததால் பக்கத்து கிராமத்துக்கு சென்று குடிநீர் பெற்று வருகிறோம். தற்போது எங்களுக்கு வழங்கப்படும் குடிநீரானது கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கலங்கிய நிலையில் உள்ளது.

எனவே, எங்கள் பகுதியில் போர் அமைத்து, மேல்நிலை நீர் தொட்டி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகிக்க வேண்டும். அங்குள்ள மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து மின் விநியோகம் வழங்க வேண்டும். இதேபோல் ஊர் பொது கிணற்றுக்கு மின் இணைப்பும், மோட்டார் வசதியும் செய்து தரவேண்டும். தலித் மக்களுக்கு அரசு மூலம் அறிவிக்கப்படும் சலுகைகள், அப்பகுதியில் உள்ள தகுதியானவர்களுக்கு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

Leave A Reply

%d bloggers like this: