கடந்த சில தினங்களுக்கு முன் உயர் நீதிமன்றம் வாகன ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும் போது அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வைத்து இருக்க வேண்டும் என்று உத்திரவிட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து அலுவலகத்திலும் ஓட்டுநர் உரிமம் பெற வாகன ஓட்டிகளின் கூட்டம் அலைமோதும் நிலையிலே உள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற வழக்கத்தை விட பல மடங்கு கூட்டம் அலைமோதுகிறது. இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன் கூறுகையில் நீதி மன்ற தீர்ப்புக்கு முன் ஒரு நாளைக்கு 50 முதல் 70 நபர்கள் தான் ஓட்டுனர் உரிமம் பெற வருவார்கள். தற்போது 200க்கும் மேற்பட்டவர்கள் ஓட்டுனர் பழகுனர் உரிமத்தை(டுடுசு) பெற்று செல்கிறார்கள். இவர்களுக்கு 30 நாட்கள் முடிந்தவுடன் ஓட்டுனர் உரிமம் வழங்கபடும் என்று கூறினார். இவருடன் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விமலா உடனிருந்தார்.

Leave A Reply

%d bloggers like this: