திருப்பூர், செப்.11 –
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவும், எட்டாவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்தவும் வலியுறுத்தி திங்களன்று ஜாக்டோ- ஜியோ சார்பில் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினரும், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவருமான குமரேஷ் தொடக்கி வைத்துப் பேசினார். இதில் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் சார்பில் ஏ.அம்சராஜ், பாஸ்கரன், ஜான் கிறிஸ்துராஜ், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் செல்லதுரை உள்ளிட்டோர் உரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார் அகமது, ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்து பேசினார்.

கோவை:
இதேபோல் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜேக்டோ-ஜியோ கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.செந்தில்குமார் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.குமார், மாவட்ட பொருளாளர் ரங்கராஜன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கருப்புசாமி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் செந்தூரன், உயர்நிலை பள்ளி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஸ்ரீதர், நீதித்துறை ஊழியர் சங்கம் கருணாகரன், சத்துணவு ஊழியர் சங்க இன்னாசிமுத்து, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மன்றம் டெஸ்மா பாஸ்கரன் மற்றும் மாநகராட்சி அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொன்டனர்.

சேலம்:
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.முருகபெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன் உள்ளிட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நாமக்கல்:
நாமக்கல் பேருந்து நிலையம் அருகிலுள்ள பூங்கா சாலையில் செல்வகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பால
கிருஷ்ணன், கு.ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு:
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர்பாபு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சிவபிரகாஷ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.வெங்கிடு, அருள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதேபோல், நீதித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததுடன் நீதிமன்ற வளாகத்தில் இருந்து கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி:
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டட்தில் ஈடுபட்டனர். இதில் ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் மற்றும் சலீம், பத்மநாதன், ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் வர்க்கிஸ், சந்திரபோஸ், சேகர், கருணாநிதி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: