இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கீரப்பாக்கம் ஊராட்சி பொதுமக்கள் திங்களன்று (செப்.11) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள விநாயகபுரம், தொட்டிமாரியம்மன் கோயில் தெரு, ஊமை மாரியம்மன் கோயில் தெரு, கன்னியம்மன் கோயில் தெரு, அங்காளம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகின்றனர்.

இங்கு குடியிருந்து வருபவர்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கீரப்பாக்கம் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரியும், அரசு கல்குவாரிகளை ஏலம் விடக்கோரியும், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தக்கோரியும், விநாயகபுரத்தில் அங்கன்வாடி மையம் அமைத்தல், பல கோடி நிதி ஒதுக்கியும் கிடப்பில் போடப்பட்ட மாநில ஊரக நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலை மற்றும் கண்டிகை-கல்வாய் சாலையை சீரமைக்க வலியுறுத்தியும், கீரப்பாக்கம் மற்றும் முருகமங்கலம் ஆகிய கிராமங்களை கூடுவாஞ்சேரி காவல் நிலைய கட்டுப்பாட்டில் சேர்த்தல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுநீதி நாள் முகாமில் 300க்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

முன்னதாக மனுநீதி முகாம் நடைபெறும் இடத்திலிருந்து , பொதுமக்களிடம் நேரில் வந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.  அனைத்து மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: