கடம்பத்தூர் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் பழங்குடியின மாணவர்களுக்கு இருளர் இன சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளுர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.

கடம்பத்தூரை அடுத்த புதுமவிலங்கை ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகரில் 40க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அங்குள்ள ரத்த உறவுகளுக்கு இருளர் இன சாதி சான்றிதழ் உள்ளது.இந்நிலையில் தங்கள் பிள்ளைகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து வந்தனர். ஆனால் சான்றிதழ் கிடைக்கவில்லை. எனவே  திங்களன்று (செப்.11) மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.  மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உடன் நடவடிக்கை எடுக்க  திருவள்ளுர் ஆர்டிஒ விற்கு உத்தரவிட்டார். மாணவர்களின் எதிர் காலம் கருதி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: