மீண்டும் தெளிவாகச் சொல்லுகிறேன்…. இந்தியாவைப் பொருத்தவரை இரண்டு சிந்தாந்தம்தான் களத்தில் நேருக்குநேர் மோதிக்கொள்கின்றன…….

ஒன்று இந்துந்தும் மற்றொன்று கம்யூனிஸம். ஆம்!… இவர்கள் இருவர்கள்தான் ஒரு தொடர்ச்சியான வரலாற்று பின்புலத்தோடு மோதிக்கொள்கிறார்கள். இவர்களிடம்தான் ஒரு தொடர்ச்சியான சிந்தாந்த பார்வை உள்ளது…..

நான் புரிந்துகொண்ட அளவில் அயோத்திதாச பண்டிதரிலிருந்து அம்பேத்கர் வழியாக உருவான பௌத்தம் இங்கு வளர்தெடுக்காமல் போனதற்கு அம்பேத்கரியவாதிகளின் துரோக செயல்பாட்டால் பின்னடைவை சந்தித்து இந்துதுவத்தை எதிர்ப்பதில் திராணியற்று உள்ளனர். அதே போன்று கால்டுவெல் அல்லது அயோத்திதாச பண்டிதரிலிருந்து உருவாகி தந்தைப் பெரியார் வழி வளர்த்தெடுக்கப்பட்ட திராவிடமும் திராவிடக் கட்சிக்காரர்களின் துரோகச் செயலால் இதுவும் பின்னடைவைச் சந்தித்து இந்துத்துவத்தை எதிர்க்கும் திராணியற்று உள்ளனர்….

இந்துத்துவத்தில் கரைந்துபோன துரோகிகளின் பட்டியலில் அம்பேத்கரியவாதிளுக்கும் பெரியாரியவாதிகளுக்கும் பெரும் பங்குண்டு. ஆயிரம் குறைகள் இடதுசாரிகளிடம் நாம் கண்டாலும் இந்துத்துவத்தை இன்றுவரை உயிர் மூச்சாக எதிர்த்து வருகிறார்கள் என்பதை மறுக்க முடியாது….

பதிவி ஆசைக்கோ பண ஆசைக்கோ அல்லது வேறு எந்த ஆதாயத்திற்கும் தத்துவத்தை கைவிட்டு பிரதிபலனை அடையமாட்டார்கள். அதனால்தான் ஒருகட்டத்திற்குமேல் தீவர இடதுசாரிய சிந்தாந்தவாதிகள் கொல்லப்படுகிறார்கள்…..

இந்துத்துவ்வாதிகளின் தீவரமான எதிரி கம்யூனிஸ்டுகளே! மற்றவர்களெல்லாம் அவர்களுக்கு பிரச்சனையே கிடையாது. ஏதாவதொன்றில் வளைத்துப் போட்டுவிடுவார்கள். ஆனால், கம்யூனிஸ்டுகளை அவ்வாறு வளைத்துப்போட முடியாது. காரணம் சிந்தாந்த ரீதியாக இணங்க கூடியவர்கள் அல்ல, அதனால்தான் கம்யூனிஸ்டுகளை அழித்தொழிக்கும் வேளையில் இந்துத்துவம் செய்கிறது…..

நான் இவ்வாறு சொல்வது அம்பேத்கரிய வாதிகளுக்கு வலிக்கலாம். திராவிட வாதிகளுக்கு எரிச்சலை ஊட்டலாம். ஆனால், அதுதான் உண்மை. திராவிட கருத்தியலை தீவரமாக முன்னெடுத்த நேர்மையாளர்கள் இன்றில்லை. பெரும்பாலானோர் மறைந்துவிட்னர். இருப்பவர்களில் சிலர் சிதருண்டு கிடக்கிறார்கள். அம்பேத்கரியத்தை முன்னெடுத்தவர்கள் பலர் துரோகவாதிகளாக மாறிவிட்டனர். இருக்கின்ற பலரும் பலமிழந்து இருக்கின்றனர்….

கண்ணுக்கு எட்டியவரையவரை ஒரே ஒரு தீவிர திராவிட வாதிகள் இன்றில்லை. அதேபோன்று கண்ணுக்கு எட்டியவரை ஒரே ஒரு அம்பேத்கரிய வாதியாக நமக்கு தென்படுபவர் திருமாதான்….

ஆனால், இடதுசாரிகளின் நிலமை அவ்வாறல்ல பல ஆயிரம்பேர் களத்தில் இருக்கிறார்கள். பிறகு ஏன் ஆட்சிக்கு அதிகாரத்துக்கு வரவில்லை என்று கேட்டால் அது தனியாக விவாதிக்க வேண்டிய அம்சம்….

இதனால் நான் சொல்லவருவது என்னவென்றால், இந்துத்துவத்திற்கு எதிரான சிந்தாந்தமாக அம்பேத்கரியத்தையும் திராவிடத்தையும் கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம். இதற்கு இடதுசாரிகளைப்போல் ஒரு தொடர்ச்சியான முன்னெடுப்பு அவசியம்…..

  • சங்கமித்ரா வெற்றி

Leave A Reply