வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரே வீட்டில் 8 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிளானோ பகுதியில் காவலர்கள் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த ஒரு வீட்டில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக காவலர் ஒருவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர் காவலர் மீதும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதையடுத்து காவலரும் அடையாளம் தெரியாத நபரை சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் காவலர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு ஏற்கனவே 7 பேர் உயிரிழந்திருந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு எதற்காக நடத்தப்பட்டது எனவும் , உயிரிழந்தவர்களின் விவரம் குறித்தும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply