அரியலூர்,
நீட் தேர்வு காரணமாக மருத்துவ சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் உயிரிழந்த மாணவி அனிதாவின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா பிளஸ் 2வில் ஆயிரத்து 1176 மதிப்பெண்கள் பெற்ற போதும் நீட் தேர்வில் 86 மதிப்பெண் மட்டுமே பெற்றதால் மருத்துவ கனவு தகர்ந்தது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அனிதா கடந்த 1ம் தேதி தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
தனக்காக இல்லாவிட்டாலும் தன்னைப் போல கஷ்டப்படும் மாணவர்களுக்காக நீட்டை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் அனிதா ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டிகளில் கூறியிருந்தார். இந்நிலையில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நடிகர் விஜய் அரியலூர் மாவட்டம் குழுமூரில் உள்ள அனிதாவின் வீட்டிற்கு சென்று அவரது தந்தை மற்றும் சகோதரரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Leave A Reply