உடுமலை, செப்.11-
வாகன ஒட்டுனர்கள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி சிஐடியு மோட்டார் சங்கத்தின் சார்பில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் எஸ். சுதாசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணைத்தலைவர் எம்.சந்திரன், மோட்டார் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஒய்.அன்பு, மாவட்ட தலைவர் எஸ்.விஸ்வநாதன், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஜெகதீசன், சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் வி. விஸ்வநாதன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் பேட்ச் வழங்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற சட்டத்தை திரும்பப் பெறவேண்டும். அனைத்து மோட்டார் வாகனங்களின் மீது விதிக்கப்பட்ட இன்சூரன்ஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். நல வாரிய பணப் பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: