ஈரோடு, செப்.10-
ஜாக்டோ- ஜியோ அமைப்பின் போரா ட்டத்தின் ஒருபகுதியாக நீதித்துறை ஊழியர் சங்கமும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் மாநில அளவிலான அவசர ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் மாநில தலைவர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இதன்பின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது:- ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில அளவிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நீதித்துறை ஊழியர் சங்கமும், மாநில அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறது. இதன்படி செப்.11 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும். முதல்கட்டமாக திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, 12 ஆம் தேதி முதல் மாவட்ட தலைநகரில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: