திருப்பூர், செப்.10 –
ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை கானல் நீராக்கும் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திருப்பூர் அருகே முதலிபாளையம் ஊராட்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் ஞாயிறன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த உண்ணாவிரதத்துக்கு சங்கத்தின் ஹவுசிங் யூனிட் கிளைத் தலைவர் எம்.குமரேசன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றியத் துணைச் செயலாளர் கே.மில்லர் தொடங்கி வைத்தார். இதில் மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன், ஒன்றியச் செயலாளர் டி.உமாசங்கர், துணைத் தலைவர் கே.சிவசாமி, பனியன் தொழிற்சங்க கமிட்டிஉறுப்பினர் ஏ.செல்வன், கட்டுமான சங்க துணைச் செயலாளர் எஸ்.கருப்புசாமி, மோட்டார் சங்கத்தைச் சேர்ந்த முகமது ரபீக், மாதர் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.ஜானகி உள்ளிட்டோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். இப்போராட்டத்தில் ஹவுசிங் யூனிட் வாலிபர் சங்கத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால் போராட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார்.

Leave A Reply

%d bloggers like this: