தில்லி,
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்  தேர்தல் வெள்ளியன்று நடைபெற்றது.  ஜே.என்.யு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 14 வாக்கு சாவடிகள் காலை 9.30 முதல் 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.  இதில் 4,639 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது 58.69% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து வெள்ளியன்று இரவு தொடங்கப்பட்ட வாங்குப் பதிவு எண்ணிக்கை  24 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.

தலைவர் :

பதிவான மொத்த வாக்குகள் :- 4639
வெற்றி பெற்றவர் :- ஒருங்கிணைந்த இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிட்ட கீதா குமாரி ABVP சார்பில் போட்டியிட்ட நிதி திரிபதியை விட 464 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
ஒருங்கிணைந்த இடதுசாரி கூட்டணி (SFI-AISA-DSF ) – 1506
அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் (AISF) – 416
சுயோட்சை (கவுரவ்) – 23
சுயோட்சை (ஃபாரூக்) – 419
அகில பாரதிய வித்யார்த்தி பரிசித் (ABVP ) – 1042
பிர்சா அம்பேத்கர் பூளே மாணவர் சங்கம் (BAPSA ) – 935
இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI ) – 82
நோட்டா – 127
வெற்று காகிதம் – 20
செல்லாத ஓட்டுகள் – 50
துணை தலைவர் :
பதிவான மொத்த வாக்குகள் :- 4620

வெற்றி பெற்றவர் :- ஒருங்கிணைந்த இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிட்ட சைமன் ஜோயா கான் , ABVP சார்பில் போட்டியிட்ட துர்கேஷ் குமாரை விட 848 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
ஒருங்கிணைந்த இடதுசாரி கூட்டணி (SFI-AISA-DSF ) – 1876
அகில பாரதிய வித்யார்த்தி பரிசித் (ABVP ) – 1028
இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI ) – 201
பிர்சா அம்பேத்கர் பூளே மாணவர் சங்கம் (BAPSA ) – 910
நோட்டா – 495
வெற்று காகிதம் – 66
செல்லாத ஓட்டுகள் – 44
பொது செயலாளர்:

வெற்றி பெற்றவர் :-  ஒருங்கிணைந்த இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிட்ட துகிராலா ஸ்ரீகிருஷ்னா , ABVP சார்பில் போட்டியிட்ட நிகுன்ச் மக்வானாவை விட 1107 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

ஒருங்கிணைந்த இடதுசாரி கூட்டணி (SFI-AISA-DSF ) – 2082
பிர்சா அம்பேத்கர் பூளே மாணவர் சங்கம் (BAPSA ) – 854
அகில பாரதிய வித்யார்த்தி பரிசித் (ABVP ) – 975
இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI ) – 223
நோட்டா – 389
வெற்று காகிதம் – 72
செல்லாத ஓட்டுகள் – 25

துணை செயலாளர்:
வெற்றி பெற்றவர் :- ஒருங்கிணைந்த இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுபான்ஷு சிங், ABVP சார்பில் போட்டியிட்ட பன்சஞ் கேசரி விட 835 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
ஒருங்கிணைந்த இடதுசாரி கூட்டணி (SFI-AISA-DSF ) – 1755
இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI ) – 222
அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் (AISF) – 214
அகில பாரதிய வித்யார்த்தி பரிசித் (ABVP ) – 920
சுயோட்சை – 60
பிர்சா அம்பேத்கர் பூளே மாணவர் சங்கம் (BAPSA ) – 860
நோட்டா – 501
வெற்று காகிதம் – 50
செல்லாத ஓட்டுகள் – 38
ஸ்கூல் ஆப் இண்டர்நேசனல் ஸ்டடிஸ்

மேரி பெகு ( இடதுசாரி கூட்டணி ) – 302 வாக்குகள்
ஆய்சே கோஷ்(இடதுசாரி கூட்டணி) – 282 வாக்குகள்
சர்தாக் பகாதியா (இடதுசாரி கூட்டணி) – 250 வாக்குகள்
சசி காந்த் திரிப்பதி (இடதுசாரி கூட்டணிரி) – 247 வாக்குகள்
பிரகலாத் குமார் சிங்(சுயயோட்சை)- 239 வாக்குகள்
மொத்தம் வாக்குகள் – 806
மொத்தமுள்ள 5 இடங்களில் 4 இடங்களில் ஒருங்கிணைந்த இடதுசாரி வேட்பாளர்கள் வென்றுள்ளதை அடுத்து ஸ்கூல் ஆப் இண்டர்நேசனல் ஸ்டடிஸ்-ன் ஒருங்கிணைப்பாளர் பதவியை  ஒருங்கிணைந்த இடதுசாரி தக்கவைத்துக்கொண்டது.
ஸ்கூல் ஆப் சோசியல் சைன்ஸ்
அஜீஸ் அகமத் ரத்தர் (இடதுசாரி கூட்டணி)  – 484 வாக்குகள்
சதீஸ் சந்திர யாதவ் (இடதுசாரி கூட்டணி) – 412  வாக்குகள்
ஸ்ரேயாஸி பிஸ்வாஸ் (இடதுசாரி கூட்டணி) – 477 வாக்குகள்
சுதன்யா பால் (இடதுசாரி கூட்டணி) – 498 வாக்குகள்
சேபல் செர்பா (BASO) – 552  வாக்குகள்
மொத்தம் வாக்குகள் – 1285
மொத்தமுள்ள 5 இடங்களில் 4 இடங்களில் ஒருங்கிணைந்த இடதுசாரி வேட்பாளர்கள் வென்றுள்ளதை அடுத்து ஸ்கூல் ஆப் சோசியல் சைன்ஸ் ஒருங்கிணைப்பாளர் பதவியை  ஐக்கிய இடதுசாரி தக்கவைத்துக்கொண்டது.
ஜெயபிரகாஷ் பிரசாத் கடுமையாக போட்டியிட்டு அவருக்கு எதிரான அவதூறையும், எதிர்மறையான பிரச்சாரத்தையும் கையாண்டு 406 வாக்குகளை பெற்றார். அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், ஜனநாயக மாணவர் சங்கம், ஒருங்கிணைந்த  இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

ஸ்கூல் ஆப் லேங்குவேஜ்
500 வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் 5 கவுன்சிலர் பதவிகளிளும் ஒருங்கிணைந்த இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களே முன்னணி வகித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: