சேலம், செப்.10-
காப்பீட்டு கழக ஊழியர் சங்க சேலம் கோட்ட மாநாடு ஞாயிறன்று எழுச்சியுடன் நடைபெற்றது. காப்பீட்டு கழக ஊழியர் சங்க சேலம் கோட்ட 27வது பொது மாநாடு ஞாயிறன்று சேலத்தில் நடைபெற்றது. முதல் நிகழ்வாக, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து காந்தி ரோடு கோட்ட அலுவலகம் வரை பொதுத்துறை பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சார்ந்த எல்ஐசி காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தினர் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து எல்ஐசி கோட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் சங்கத் தலைவர் ஆர்.தர்மலிங்கம் சங்க கொடியை ஏற்றி வைத்து மாநாட்டிற்கு தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஐ.கலியபெருமாள் வரவேற்புரையாற்றினார். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுசெயலாளர் டி.செந்தில்குமார் துவக்கவுரையாற்றினார். துணைத்தலைவர் கே.சுவாமிநாதன் சிறப்புரையாற்றினார். இணைசெயலாளர் எஸ்.சிவசுப்பிரமணியம் மற்றும் சகோதர சங்க தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக, காப்பீட்டு கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். முடிவில், இணைச்செயலாளர் எஸ்.வி.என்.சாய்ராம் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: