1964-இல் வெறுமே 5 கோடி மூலதனத்தில் துவங்கப்பட்டது பிஇஎம்எல் எனப்படும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட். இது ஒரு பொதுத்துறை நிறுவனம் . கர்நாடக மாநிலம் கோலார், பெங்களூர் , மைசூர், கதக், கேரள மாநிலம் பாலக்காடு என பல கிளைகளைக்கொண்டது. 20 க்கும் மேற்பட்ட சர்வீஸ் செண்டர்களும் உண்டு. வெளிநாடுகளில் நல்ல விற்பனை ஆகிறது ; அங்கு மார்க்கெட்டிங் செண்டர்கள் உண்டு . பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் ; ஆயிரக்கணக்கில் சிறுதொழிற்சாலைகளையும் கொண்டது. பெரும் ஆட்குறைப்புக்குப் பிறகு கூட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்கி வருகிறது . பல நூறு கோடி ரூபாய் டிவிடெண்டாக இந்திய ஒன்றிய அரசுக்கு கிடைத்து வருகிறது. நிலம், யந்திரம் மற்றும் தளவாடங்கள் என ஒரு லட்சம் கோடிக்கு மேல் செல்வம் திரண்டுள்ளது.

எப்படி வாஜ்பாய் அரசு பொன்முட்டையிடும் கோலார் தங்கச் சுரங்கத்தை மூடியதோ, அதே போல் பிஇஎம்எல் – ஐ மூட மோடி சதி செய்கிறார். ஒரு லட்சம் கோடி சொத்தை மறைத்து வெறுமே 500 கோடிக்குத்தான் சொத்து உள்ளதாக நாடாளுமன்றத்தில் வாய்கூசாது பொய் அறிக்கை கொடுத்தார் மோடி. பாலக்காடு தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பியான ராஜேஷ் இந்த பொய்யை – பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி ஒரு லட்சம் கோடி மதிப்பென முழுவிவரத்தோடு நெற்றிப் பொட்டில் அறைந்து சொன்னார் . வாய் மூடி இருந்த மோடி அரசு இப்போது தன் கார்ப்பரேட் நண்பர்களுக்கு அதை தவிட்டு விலைக்கு விற்க சதிவலை பின்னிவிட்டார்! அம்பானி,அதானி ,லட்சுமி மிட்டல் இவர்களில் ஒருவருக்கு இந்நிறுவனத்தை தாரைவார்க்க மோடி அரசு முனைகிறது. அவர் யாரென காட்டிவிட்டார்! உழைக்கும் வர்க்கமே நீ யாரெனக் காட்ட வேண்டாமா ?
-சுபொஅ-

Leave a Reply

You must be logged in to post a comment.