சென்னை, செப். 10-
ஆளும் அதிமுக அரசு பெரும் பான்மையை நிரூபிக்க அடுத்த ஒரு வாரத்திற்குள் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதி மன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம் என ஸ்டாலின் கூறினார். அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள், எம்பிக்களு டன் ஆளுநரை சந்தித்தார். இதனை யடுத்து, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக் கிழமை(செப்.10) மாலை 5 மணிக்கு மீண்டும் ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், 6.08.2017 தேதி யிட்ட என்னுடைய கடிதத்தையடுத்து, மீண்டும் ஒருமுறை தமிழகத்தில் எழுந்துள்ள அரசியலமைப்பு நெருக்கடியை தங்களது கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். ஆளும் அதிமுக கட்சியை சார்ந்த 21 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களை நேரடியாக சந்தித்து முதலமைச்சர் தலைமையிலான அரசு மீது தங்களுடைய நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியதின் மூலம் இந்த நெருக்கடி உருவாகியுள்ளது.

ஏற்கனவே திமுக, காங்கிரஸ், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளை சேர்ந்த 98 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.  சட்டப்பேரவையில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் தற்போதுள்ள அதிமுக அரசு, சபாநாயகர் உள்ளிட்ட 114 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால், ஆளும் அரசுக்கு எதிரான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ளது. (திமுக 89, காங்கிரஸ் 8, ஐயூஎம்எல் 1, அதிருப்தி அதிமுக 21). எனவே, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை இழந்துள்ளார்.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை யான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற, அரசுக்கு மட்டுமே அரசியலமைப்புச் சட்டம் அங்கீகாரம் அளித்துள்ளதோடு, அதுவே நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகவும் இதுவரை நிலைநாட்டப் பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், தங்களு டைய நடவடிக்கைகள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கும், சட்டங்களுக்கும் எதிரானதாகவும் மாறானதாகவும் அமைந்துள்ளது. “அமைச்சரவைக்கு பெரும் பான்மை இல்லை அல்லது அரசுக்கு ஆதரவு அளிக்கும் பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு, சந்தேகத்திற்கிடமானதாக உள்ளது எனும் உண்மைகள் தெளிவாக தெரியும் நிலையில், சட்டப் பேரவையை கூட்டுவதற்கு அந்த முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனை களை ஆளுநர் கேட்கக்கூடாது. அதற்கு பதில் அந்த முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர் அறிவுறுத்த வேண்டும்” அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவை வழக்கில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை தங்களது கவனத்துக்கு கொண்டுவருகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு வாரம் அவகாசம் அதன் பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய ஸ்டாலின்,“ஆளும் அதிமுக அரசு பெருபான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என மனு அளித்துள்ளோம். அரசுக்கு 114 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. எதிராக 119 உறுப்பினர்கள் இருக்கிறோம். இதை ஆளுநரிடம் சுட்டிக்காட்டினோம். அவரும் பரி சீலிப்பதாக தெரிவித்தார். ஒரு வாரம் பொறுத்திருப்போம். நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம்” என்றார். துணைத் தலைவர் துரைமுருகன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. ஆர்.இராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்எல்ஏகே.ஏ.எம்.முகமது அபுபக்கர், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு ஆகி யோரும் ஆளுநரை சந்தித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: