திருப்பூர், செப்.10-
கன்னட பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சங்பரிவார கொலைகாரர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், நீட் தேர்வினால் மருத்துவக் கனவு தகர்க்கப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்பட்ட அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் அ.புதூர் கோவை டிபார்ட்மெண்டல் பிரிவில் சனியன்று மாலை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின. இதில் பங்கேற்றோர் சமூகநீதியை குழிதோண்டிப் புதைக்க முயலும் மோடி அரசு, எடப்பாடி அரசுகளைக் கண்டித்தும், மக்களைப் பிளவுபடுத்தும் இந்துத்துவ மதவெறி சக்திகளை எதிர்த்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாணவி அனிதாவின் தற்கொலையைத் தூண்டும் விதமாக ஒருபக்கம் மோடி அரசும், மறுபக்கம் எடப்பாடி அரசும் செயல்பட்ட விதத்தை சித்திரித்து மாணவர் சங்கத்தார் காட்சிப்படுத்தி நின்றனர். தமுஎகச மாவட்டச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி, கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகி சண்முகம், வாலிபர் சங்க மாவட்
டத் தலைவர் ச.நந்தகோபால், மாணவர் சங்க செயலாளர் ஆர்.விமல், துணைச் செயலாளர் சம்சீர் அகமது, பனியன் சங்கச் செயலாளர் ஜி.சம்பத், தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் கோவை சதாசவம், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ரங்கராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக தமுஎகச மாவட்டத் தலைவர் ஆர்.குமார் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: