திருவனந்தபுரம், செப். 10-
எந்த வகையான உணவை சாப்பிடுவது என்பதில் இங்குள்ள மக்களுக்கோ, வெளிநாட்டினருக்கோ எந்தவித விலக்கும் இல்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளத்தில் காய்கறியோ, மீனோ அல்லது மாட்டிறைச்சியோ எதை வேண்டுமானாலும் சாப்பிடட்டும். அது சாப்பிடுகிறவரின் விருப்பம் என அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். உணவு சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. ஓணம் சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு திருவிழாவாகும். இதில் உணவுக்கு முக்கிய பங்குண்டு. ஓணத்தின் போது தென் கேரள மக்கள் முற்றிலும் சைவ உணவையும், வடகேரள மக்கள் அசைவ உணவையும் இலையில் பரிமாறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த அல்போன்ஸ் கண்ணந்தானம், வெளிநாட்டினர் தங்களது நாட்டில் மாட்டிறைச்சி சாப்பிட்டுக் கொள்ளட்டும் என கூறியிருந்தார். இது சங்பரிவார் அமைப்பினரின் மாட்டு அரசியலை மையப்படுத்தியதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில் முதல்வர் பினராயி விஜயன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply